பள்ளியில் 3 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காலணியால் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்

Sathiyam TV 2018-09-01

Views 1

சேலம் மூன்று ரோடு பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் சதீஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் குடும்பத்தினர் பள்ளிக்குள் புகுத்து சதீஷை தரதரவென வெளியே அழைத்து வந்தனர். அப்போது காலணியால் சதீஷை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார், ஆசிரியர் சதீஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS